தளபதி விஜய்யின் 'பிகில்' படத்தில் ஃபுட் பால் வீரராக கதிர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதனையடுத்து 'ஜடா' எனும் படத்தில் கதிர் நடித்துள்ளார்.
இந்த ஜடா திரைப்படமும் ஃபுட் பால் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தை தி போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரிக்க குமரன்.ஏ இயக்கியுள்ளார்.
மேலும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். கதிருக்கு ஜோடியாக இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ் நடிக்க, யோகி பாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(நவம்பர் 27) சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் கதிர், "புஷ்கர் காயத்ரி மேடம் பசங்க எல்லாரும் சேர்ந்து படம் பண்ண எப்படி இருக்குமோ அதுதான் ஜடா. குமரன் அற்புதமான கிரியேட்டர் என்பதை தாண்டி துளியும் ஈகோ இல்லாத டைரக்டர். எல்லோர் கொடுக்கும் இன்புட்டையும் வாங்கி சிறப்பாக செய்வார்.
இந்த மாதிரி ஒரு டீம் அமைவது முக்கியம். சாம்.சி எஸ் இசை படத்திற்கு முக்கியமாக அமைந்துள்ளது. ஜடா ஒரு யூசுவல் படம் கிடையாது. படத்தில் நிறைய ப்ளேவர்ஸ் இருக்கு..நிறைய எமோஷன் இருக்கும். அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது. இண்டெர்நேஷனல் புட்பாலுக்கும் ஸ்ட்ரீட் புட்பாலுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் நிறைய இந்தப்படத்தில் இருக்கும்.
பிகில் படமும் புட்பால் இந்தப்படமும் புட்பால் என்று நிறையபேர் கேட்கிறார்கள். அந்தப்படம் வேற இந்தப்படம் வேற. சாம்.சி எஸ் இசையை பெரிய ஸ்கிரீனில் படத்தோடு கேட்கும் போது பிரம்மிப்பாக இருந்தது. குமரன் சூர்யா இருவரின் காம்பினேஷன் தான் விஷுவல்ஸ் எல்லாம் சூப்பரா இருக்க காரணம். இது ஒரு கிரேட் டீம் ஒர்க்" என்றார்.