தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23 ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த நடிகர் சங்கத் தேர்தலில் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கர்தாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிடுகின்றன.
இதுகுறித்து பேசிய கருணாஸ், 'பாக்கியராஜ் அவர்களும் ஐசரி கணேஷ் அவர்களும் நாடகக் கலைஞர்கள் குறித்து அவதூறு பேசியிருக்கிறார்கள். நாடகக் கலைஞர்கள் எல்லாம் கஷ்டப்பட கூடியவர்கள், தேர்தல் நேரத்தில் காசுக்காக காத்திருப்பவர்கள், யார் காசுக்கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு வாக்களிப்பார்கள் என்பது போன்று பேசியிருக்கிறார்கள்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருக்கிறோம். பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கிவிடலாம் என்பவர்கள் இந்த சங்கத்துக்கு என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள் மிகப் பெரிய வினாவாக இருக்கிறது. ராதா ரவி உள்ளிட்டோர் மதுரை, புதுக்கோட்டை என வாக்காளர்களிடம் தவறாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்' என்றார்.