மம்மூட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளார்.
Also Read | தம்பி தனுஷ் & அண்ணன் செல்வராகவன் நடித்த படங்கள்.. ஒரே நாளில் ரிலீஸ்.. மாஸ் சம்பவம்.!!
இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை இயக்கியுள்ளார்.
மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.
இவர் இயக்கத்தில் முன்பு வெளியான ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.
இந்த நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்மூட்டியுடன் ரம்யா பாண்டியன், பூ ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே மம்முட்டியின் பேரன்பு, புழு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டவர். மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.
கேரள அரசின் திரைப்பட விழாவில் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ் நாட்டில் இன்று (27.01.2023) இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் தமிழ் போஸ்டரை பகிர்ந்து, "நண்பகல் நேரத்து மயக்கம், மிகவும் அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் உள்ளது 👌. மம்முக்கா சார் மிகவும் அருமையாக இருந்தார் 🙏🏼🙏🏼. லிஜோவின் மேஜிக்கை திரையரங்குகளில் காணத் தவறாதீர்கள்... லிஜோ & முழு நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்" என கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளார்.
Also Read | மாஸ் பண்ணிட்டீங்க.. சொன்னதை செஞ்ச பிரியா பவானி சங்கர்..! தேதியுடன் அவரே வெளியிட்ட தகவல்..!