'VIKRAM' படத்துக்காக லோகேஷ் போட்டு வெச்ச PLAN.. "ஆனா அது படத்துல நடக்கல".. KARTHIK SUBBARAJ ஷேரிங்ஸ்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் வைபவ் நடிப்பில், 'பபூன்' திரைப்படம் அடுத்து வெளியாக உள்ளது. அசோக் வீரப்பன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், வைபவ் ஜோடியாக நடிகை அனகா நடித்துள்ளார். இவர்களுடன் ஜோஜூ ஜார்ஜ், நரேன், அந்தக்குடி இளையராஜா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

Advertising
>
Advertising

பிரபல இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்து வழங்குகிறார். பபூன் படத்தின் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், மக்கள்  மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.


மேலும், இந்த திரைப்படம் வரும் 23 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அப்போது பேசிய கார்த்திக் சுப்புராஜ், ஆரம்பத்தில் 'Fanboy' திரைப்படங்கள் குறித்தும், விக்ரம் திரைப்படம் பற்றியும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.  அதில், “விக்ரம் படம் ரொம்ப பிடித்திருந்தது. சூப்பராக இருந்தது. லோகேஷ் கமல் ஃபேன் என்பது முன்னாடியே தெரியும். முன்னதாக, என்னிடம் லோகேஷ் பேசிக் கொண்டிருந்த போது பாடல்கள் இல்லாமல் விக்ரம் படம் எடுக்க போகிறேன் என கூறினார். ஃபேன் பாயாக இருந்துட்டு இப்படி பண்ணாதீங்க. 'அண்ணாத்த ஆடுறாரு' மாதிரி ஒரு பாட்டு வைங்க என நான் கூறினேன். ஆனால், கடைசியில் படத்தில் பாடல் இருந்தது” என்றார்.

மேலும் ஜிகர்தண்டா 2 குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ்,  “இறைவி முடிந்ததும் இந்த கதைக்கான ஐடியா ஒன்று இருந்தது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இது இருக்காது. முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்” என கூறினார். இது தவிர, ஜகமே தந்திரம், மஹான் உள்ளிட்ட தனது இயக்கத்தில் உருவான படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியனது பற்றியும், குறும்படங்கள் இயக்குவது தொடர்பாகவும் நிறைய தகவல்களையும் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய கார்த்திக் சுப்புராஜ்,  “நான், லோகேஷ், நலன் உள்ளிட்ட பல இயக்குனர்கள் குறும்படங்கள் செய்து தான் கற்றுக் கொண்டோம். திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும் என்ற டெக்னிக்குகளையும் தெரிந்து கொண்டோம். ஆனால், நம்மால் ஒரு திரைப்படம் எடுக்கும் அளவுக்கு வந்து விட்டோமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவை தான் இயக்குனராக ஆக வேண்டும் என விரும்புவர்கள் சரியாக எடுக்க வேண்டும்” என்றார்.

இது தவிர தனது திரைப்படம் குறித்தும், பபூன் படம் குறித்தும் ஏராளமான சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான முழு வீடியோவைக் காண :

'VIKRAM' படத்துக்காக லோகேஷ் போட்டு வெச்ச PLAN.. "ஆனா அது படத்துல நடக்கல".. KARTHIK SUBBARAJ ஷேரிங்ஸ்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Karthik subbaraj about lokesh kanagaraj plan for vikram movie

People looking for online information on Buffoon, Karthik Subbaraj, Lokesh Kanagaraj, Vaibhav, Vikram Movie will find this news story useful.