இசையமைப்பாளர் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாயின் மூத்த மகன் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. இவரும் பல முன்னணி இயக்குநர்களின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பிலான பிசாசு - 2 படத்துக்கு இசையமைத்துள்ளார்.
Also Read | 11 வருஷத்துக்கு பின் சொந்த மண்ணில் இசை நிகழ்ச்சி.. எதிர்பார்ப்பில் யுவன் ரசிகர்கள்.!
வரும் ஆகஸ்டு 31-ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில், திருச்சியில் வரும் செப்டம்பர், 24ம் தேதி "பொன்மாலை பொழுது" என்கிற இசை நிகழ்ச்சியை கார்த்திக் ராஜா நடத்த உள்ளார். இது தொடர்பாக, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் ராஜா நிறைய விஷயங்களை பேசியுள்ளார். அதில், “கோலாலம்பூரில் ஏற்கனவே ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினேன். மதுரையிலும் சங்கீத திருவிழா என்கிற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளேன். தற்பொழுது திருச்சியில் முதல் முறை மிகப்பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளேன். இந்நிகழ்வில் 15 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேட்டியில் பேசிய கார்த்திக் ராஜா, இளையராஜாவுடன் தனக்கு நடந்த ஒரு சுவாரஸ்ய உரையாடல் குறித்து பேசியுள்ளார். அதில், “ஒருமுறை 'ஆல்பம்' எனும் திரைப்படத்துக்கு 'செல்லமே செல்லம் என்றாயடி' என்ற பாடலுக்கு கம்போசிங் நடந்துகொண்டிருந்தது. நா.முத்துக்குமார் உடன் இருந்தார். அப்போது அப்பா ஸ்டூடியோவுக்குள் வந்து எங்களை கவனித்துள்ளார். நான் கவனிக்கவில்லை. பின்னர் அந்த பாடல் வரிகளை குறிப்பிட்டு பேசிய அப்பா, 'செல்லமே செல்லம் என்றாயடி.. அத்தான் என்று சொன்னாயடி..' என்று பாடலில் ‘அது என்ன நாயடி.. நாயடி..?’ என்று கேட்கிறது என்றார். பின்னர் நான் ஒருமுறை அவருடைய இசையில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ஒன்றில் இடம் பெற்ற பாடலில் இதேபோல் ஒரு பாடல் இடம் பெற்றதை குறித்து அவரிடம் கூறினே, அதுக்கு அவர் "ஏய்.." என்றார். அவ்வளவுதான்.. அதற்குமேல் பதில் எதிர்பார்க்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காதது பற்றிய பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கார்த்திக் ராஜா, “யாருக்கு என்ன கிடைக்கும் நடக்கும் கொடுக்க வேண்டும் என்பது கடவுளின் முடிவுபடி நடக்கும். இப்பொழுது திருச்சியில் நான் நிகழ்ச்சி நடத்துவது கடவுளின் விருப்பமாக இருக்கிறது. நான் அதை செய்கிறேன். தொடர்ந்து நான் எனது வேலையை செய்து கொண்டே இருப்பேன். தற்போது, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 12 திரைப்படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு வருகிறேன்” என்றார்.
Also Read | “எனக்கு மட்டும் ஏன் சொல்லித் தர மாட்றீங்க” - இளையராஜாவிடம் கேள்வி கேட்ட கார்த்திக் ராஜா.!