'மாஃபியா' படத்துக்கு பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் தற்போது தனுஷ் படத்தின் முதற்கட்ட பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். D43 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருக்கிறது.
இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''என் படத்தில் நடிக்கவைப்பதாக கூறி, ஒருவர் என் பெயரை தவறாக பயன்படுத்தி பொய் தகவலை பரப்பி பணம் கேட்டு வருகிறார்.
உங்களுக்கு 9777017348 இந்த வாட்ஸ் அப் நம்பரில் இந்த மாதிரி தகவல் வந்தால் தயவு செய்து அவற்றை பிளாக் செய்து விடுங்கள். யார் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவாரோ அவர் நரகத்தில் எரிக்கப்படுவார்'' என்று கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.
Tags : Karthick Naren, D43