கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார்.. பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான கலர்ஃபுல் போஸ்டர்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"துருவங்கள் பதினாறு" என்ற தனது முதல் திரைப்படம் மூலம், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் கார்த்திக் நரேன்.

Advertising
>
Advertising

Also Read | சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' கர்நாடக உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! அப்படி போடு

இளம் இயக்குனரான இவர், துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றிக்கு பின்னர், நரகாசூரன், மாபியா, நவரசா அந்தாலஜியில் ப்ராஜக்ட் அக்னி, தனுஷ் நடிப்பில் மாறன் உள்ளிட்ட பல படைப்புகளை உருவாக்கி உள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக, கார்த்திக் நரேன் இயக்கி வரும் திரைப்படம், "நிறங்கள் மூன்று". துருவங்கள் பதினாறு என்னும் டைட்டிலை போல, நிறங்கள் மூன்று என்ற டைட்டிலும் வித்தியாசமாக இருப்பதால், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

கார்த்திக் நரேனின் "நிறங்கள் மூன்று"

இந்த படத்தின் நாயகனாக இளம் நடிகர் அதர்வா நடிக்கிறார். அவருடன், சரத்குமார் மற்றும் ரகுமான் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை AYNGARAN INTERNATIONAL நிறுவனம் சார்பில் K.கருணாமூர்த்தி தயாரித்து வருகிறார். மேலும், இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து வருகிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவை மேற்கொள்ள, எடிட்டிங் மற்றும் டிஐ பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொண்டு வருகிறார்.



ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 ஆவது படமாக, நிறங்கள் மூன்று உருவாகி வரும் நிலையில், ஹைப்பர்லிங்க் டிராமா த்ரில்லர் வகையில், இந்த படம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு அற்புதமான திரைப்படத்தை தங்களின் 25 ஆவது படமாக உருவாக்க வேண்டும் என நினைத்ததாகவும், அது நிறங்கள் மூன்று திரைப்படம் மூலம் நிறைவேறியதாகவும் தயாரிப்பாளர் கே. கருணாமூர்த்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

வெளியான கலர்புல் போஸ்டர்

இந்நிலையில், நடிகர் சரத்குமாரின் பிறந்தநாள் தினமான இன்று (14.07.2022), அவரின் அசத்தல் போஸ்டர் ஒன்றை 'நிறங்கள் மூன்று' படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. கலர்புல்லாக இருக்கும் இந்த போஸ்டரில், கையில் துப்பாக்கியுடன் ஒரு கண்ணை மறைத்துக் கொண்டு நிற்கும் சரத்குமாரின் மாஸான லுக், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

Also Read | இந்திராகாந்தியாக மாறிய கங்கனா ரனாவத்.. 'எமர்ஜென்சி' படத்தின் அசரவைக்கும் FIRST LOOK டீசர்!

 

தொடர்புடைய இணைப்புகள்

Karthick naren directorial nirangal moondru sarathkumar look

People looking for online information on Karthick Naren, Nirangal moondru Movie, Nirangal moondru sarathkumar look, Sarath Kumar will find this news story useful.