விக்னேஷ் சிவன் & நயன்தாராவிற்கு இரட்டை குழந்தை பிறப்புக்கு நடிகர் கார்த்தி வாழ்த்தியுள்ளார்.
Also Read | Bigg Boss Tamil 6 : “நீங்க ஒன்னும் பிக்பாஸ் இல்ல.!” .. கிச்சனில் சீறிக்கொண்ட அசீம் - மகேஸ்வரி..!
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.
அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர்.
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார். அங்கு தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த பதிவை விரும்பியுள்ளனர். மேலும் பலர் அந்த பதிவில் நயன்தாரா & விக்னேஷ் சிவனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை காஜல் அகர்வால், இயக்குனர் அட்லி, நடிகர் கவின் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி, நயன்தாரா & விக்னேஷ் சிவனுக்கு பல வண்ண மலர்கள் கொண்ட பூங்கொத்து கொடுத்து வாழத்தியுள்ளார். அதில் "பெற்றோராக வரவேற்கிறோம். உங்கள் நால்வரையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக" என கார்த்தி வாழத்து கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டு கார்த்திக்கு நன்றி கூறியுள்ளார்.
Also Read | Vijay Antony : "குடும்பத்துல பிரச்சனைனா".. விஜய் ஆண்டனியின் எமோஷனல் பேச்சு.. என்ன சொல்றாரு ?