சித் ஸ்ரீராம் குரலில்… ‘கஞ்சா பூவு கண்ணால …’ கார்த்தியின் ‘விருமன்’ சிங்கிள் லிரிக் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் கஞ்சா பூவு கண்ணால பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ”ஒவ்வொரு துளி அன்பையும்….” நன்றி தெரிவித்து நிக்கி கல்ராணி பகிர்ந்த வைரல் PICS & Tweet

ஹிட் கூட்டணியின் விருமன்…

நடிகர் கார்த்தி திரைவாழ்வில் கிராமத்து இளைஞர் வேடத்தில் அவர் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் ‘பருத்திவீரன்’ , ‘கொம்பன்’ மற்றும் ‘கடைகுட்டி சிங்கம்’ போன்ற படங்கள் அமைந்தன.  இதையடுத்து கொம்பன் திரைபடத்துக்குப் பிறகு மீண்டும் கார்த்தி – முத்தையா கூட்டணி விருமன் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்துக்காக இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார்.

விருமன் கலைஞர்கள்…

விருமன் திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அதிதி ஷங்கர் (அறிமுகம்), கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் கூடுதல் அம்சமாக இயக்குனர் ஷங்கரின் இளையமகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கஞ்சா பூவு கண்ணால…

விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்துவரும் நிலையில் ரிலீஸ் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூவு கண்ணால என்ற பாடலின் ப்ரோமோ இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

இதையடுத்து இன்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Also Read | AR முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்… சிவகார்த்திகேயன் வெளியிட்ட மிரட்டலான first look

தொடர்புடைய இணைப்புகள்

Karthi viruman movie single lyrical video released

People looking for online information on Karthi, Karthi viruman movie, Viruman Movie, Viruman movie single lyrical video will find this news story useful.