VIRUMAN: பிரபல OTT-யில் ரிலீஸாகும் கார்த்தி நடித்த "விருமன்" திரைப்படம் .. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விருமன் படத்தின் ஒடிடி ஒளிபரப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஒரே மேடையில் ஐஸ்வர்யா ராய் & த்ரிஷா.. ரஜினி, கமல் குறித்து மாஸ் பேச்சு!

சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் கார்த்தி நடித்த 'விருமன்’ படம் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

தமிழகம் முழுவதும்  பெரும்பாலான இடங்களில் அன்று காலை 7 மணிக்கு ரசிகர்கள் ஆராவாரத்துடன் முதல் காட்சி திரையிடப்பட்டது.

சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நடிகர் கார்த்தி மற்றும் விருமன் படக்குழு & திரை பிரபலங்கள் விருமன் படத்தை பார்த்தனர்.  படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.‌

இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்தது.‌ இந்த படத்தின் வெற்றி விழாவில் வினியோகஸ்தர் சக்தி பிலீம் பேக்டரி சக்தி வேல் நடிகர் சூர்யா, கார்த்தி, இயக்குனர் முத்தையா மற்றும் கற்பூர ராஜசேகர பாண்டியன் ஆகியோருக்கு வைர Bracelet-ஐ பரிசளித்தார். மேலும் இயக்குனர் முத்தையாவுக்கு தங்க மோதிரத்தை பட வெற்றிக்கு சான்றாக பரிசளித்தார். 

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘மாநகரம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண்  மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் விருமன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | 'பொன்னியின் செல்வன்' சிறு வயது நந்தினியாக பிரபல இளம் நடிகை.. டிரெய்லர்ல கவனிச்சீங்களா?

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Viruman Movie OTT Release Date Announced

People looking for online information on Karthi, Viruman, Viruman Movie OTT Release will find this news story useful.