டிவிட்டரில் ரொமான்ஸ் செய்த வந்தியத்தேவன் & குந்தவை நாச்சியார்! செம்ம வைரல் ட்வீட்ஸ்😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் -2,  படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாவதை ஒட்டி நடிகர் கார்த்தி & த்ரிஷாவின் டவீட்டர் உரையாடல் வைரலாகி வருகிறது.

Karthi Trisha Krishnan Tweet for Ponniyin Selvan 2 PS2 Aga Naga
Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "உடலினை உறுதிச் செய்".. சமந்தாவின் வெறித்தனமான உடற்பயிற்சி.. இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!   

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Images are subject to © copyright to their respective owners.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன் -2 படம் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் அதற்குரிய திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில்  பொன்னியின் செல்வன் - 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல்  அக நக இன்று மார்ச் மாதம் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இதனை முன்னிட்டு ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தி & த்ரிஷா உரையாடல் வைரலாகி வருகின்றன. "இளையபிராட்டி… hi😊" என கார்த்தி ட்வீட் செய்ய, த்ரிஷாவிடம் இருந்து எந்த பதிலும் வராததால், "என்ன பதிலே இல்லை😔" என கார்த்தி மீண்டும் ட்வீட் செய்ய, த்ரிஷா, "என்ன வாணர்குல இளவரசே?" என கேட்க, "தங்கள் தரிசனம்  கிடைக்குமா 😍😍?" என கார்த்தி பதில் அளிக்க, "ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்" என த்ரிஷா ட்வீட் செய்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

"கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ?" என கார்த்தி மறுபடியும் ட்வீட் செய்ய "வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா ?" என த்ரிஷா கேட்க, "ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி.  நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்…." என கார்த்தி ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | விறுவிறுப்பாக ஜிகர்தண்டா டபுள் X ஷூட்டிங்.. DOP திரு பகிர்ந்த டிரெண்டிங் BTS போட்டோ!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Trisha Krishnan Tweet for Ponniyin Selvan 2 PS2 Aga Naga

People looking for online information on Karthi, Ponniyin Selvan Part 2, PS2, Trisha Krishnan will find this news story useful.