கார்த்தியின் அடுத்த திரைப்படம்.. 'இரண்டாவது முறை அந்த சூப்பர் ஹிட் இயக்குநருடன் கூட்டணி..'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்து செம தகவல் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவரின் படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை இவர் கொண்டுள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படத்திலும் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. கார்த்தி நடிப்பில் கொம்பன் படத்தை இயக்கிய முத்தய்யாவுடன் இவர் மீண்டும் இணையவுள்ளார். தற்போது மணிரத்னமின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் ஷூட்டிங் தொடங்கும் முன்போ, அல்லது அந்த ஷூட்டிங்கை முடித்த பிறகோ, இதில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கபடுகிறது. தற்போது படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றனவாம். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கார்த்தி நடிக்கும் அடுத்த திரைப்படம் | Karthi to join with this director for second time

People looking for online information on Karthi, Komban, Muthaiah will find this news story useful.