நடிகர் சூர்யாவின் 2D Entertainment , நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் ‘விருமன்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
![Karthi Starring Viruman Movie Release Update from 2D Suriya Karthi Starring Viruman Movie Release Update from 2D Suriya](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/karthi-starring-viruman-movie-release-update-from-2d-suriya-new-home-mob-index.jpeg)
Also Read | இந்தியா சார்பாக கேன்ஸ் பட விழாவில்.. புதிய பேஷன் ஸ்டைலில் அசத்திய தமன்னா! சூப்பர் HOT போட்டோஸ்
வசூல் சாதனை படைத்த கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி விருமன்’ திரைப்படத்தில் மீண்டும் இணைகிறார்.
நடிகர் கார்த்தி திரைவாழ்வில் ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக, அவரை தமிழகம் முழுக்க கொண்டாட வைத்த படம் ‘கொம்பன்’. இயக்குநர் முத்தையா இயக்கத்தில், குடும்ப உறவுகளின் பெருமை சொல்லும் படமாக, சிறப்பான கிராமத்து பின்னணியில் உருவான அப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இப்படம் மூலம் இணைகிறது.
'கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அதிதி (அறிமுகம்) பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகி வருகிறது.
இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார்.
இந்நிலையில் இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி ரிலீஸ் செய்ய உள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8