"விருமனுக்கு அப்பன்தான் வில்லன்".. கார்த்தி படத்தின் தீயான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விருமன் படத்தின் மாஸான டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 9 வருடங்களுக்கு பிறகு நடிக்க வரும் பிரபல 80ஸ் நடிகை.. அதுவும் சிவகார்த்திகேயன் கூடவா? சூப்பரு!

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில்  நடந்தது. இந்த விழாவில் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது.

"எல்லாருக்கும் அப்பா தான் முதல் ஹீரோ, ஆனா விருமனுக்கு அப்பன்தான் முதல் வில்லன்" என தலைப்பிட்டு படத்தின் டிரெய்லரை கார்த்தி வெளியிட்டுள்ளார்.

"கத்தி பேசுறது, கத்திய காட்டி பேசுறதுலாம் விருமனுக்கு புடிக்காது" போன்ற வசனங்களும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. பிரகாஷ் ராஜ் & கார்த்தி இடையேயான மோதல் காட்சிகள் டிரெய்லரில் முக்கிய அம்சமாக உள்ளது. ஆக்சன் ரொமான்ஸ் என ஜனரஞ்சகமான டிரெய்லராக விருமன் படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது.

இந்த விருமன் படவிழாவில், இயக்குநர் பாரதிராஜா,  இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா,
இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்  உட்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.

அதிதி ஷங்கர் இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.  ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர்.

Also Read | ரோலக்ஸ் கூட டில்லி.. மதுரையை அலற விட்ட சூர்யா & கார்த்தி! வைரல் ஃபோட்டோ

"விருமனுக்கு அப்பன்தான் வில்லன்".. கார்த்தி படத்தின் தீயான டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Starring Viruman Movie Official Trailer

People looking for online information on Karthi, Viruman, Viruman Movie Trailer will find this news story useful.