தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வருகிற ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டவர் அணியின் சார்பாக நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரும், சுவாமி சங்கரதாஸ் அணி சார்பாக பாக்யராஜ், ஐசரி கே. கணேஷ், பிரஷாந்த் உள்ளிட்டோரும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதனால் இரு தரப்பிலும் போட்டியாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிடும் கார்த்தி நடிகர் சங்கத் தேர்தல் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'எங்கள் உழைப்பை அங்கீகரிக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் இளைஞர்கள் பொது சேவைக்கு வரமாட்டார்கள். நடிகர் சங்கமே பதிவு செய்யப்படாமல் இருந்தது. நாங்கள் சென்றுதான் பதிவு செய்தோம்.
கால் சென்டர்ல இருந்து எனக்கு கால் வருது. நான் யாருனு கூட தெரியல. சார் நாங்க சுவாமி சங்கரதாஸ் அணியில இருந்து பேசுறோம். உங்க கிட்ட பேசலாமானு கால் வருது. அப்போ 'அம்மா நான் யாருனு தெரியுமானு' என்ன பத்தி சொன்னேன்.
எனக்கு மிரட்டல் எதுவும் வரல. மிரட்டல் வர அளவுக்கு நான் ஒன்னும் சின்ன பையன் கிடையாது. ஐசரி கணேஷ் ரூ.2 கோடி கடனாகவும், ரூ.1 கோடி டொனேஷனாகவும் கொடுத்தார். ஆனால் அவர் ரூ.6 கோடி கொடுத்ததாக சொல்வதில் உண்மை கிடையாது. நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் 1 வருடமாக நிற்குதுனு எப்படி சொல்லாம். ஐசரி சார் தினமும் கட்டிடம் உருவாவதை பார்த்துட்டு இருந்தார். ஒருவேளை ராதாரவி எங்களுக்கு எதிராக பேசினார் என்றால் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம்' என்றார்.