கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
Also Read | பஞ்சாப் டோல்கேட்டில் தள்ளு முள்ளு.. ஊழியரை தாக்கினாரா WWE வீரர் தி கிரேட் காளி? வெளியான வீடியோ
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இப்பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, “இந்த படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரை நான் பண்ண போறேன் என்று என் அம்மாவிடம் சொன்னதும், என் அம்மா சொன்னது என்னுடைய வகுப்பு தோழிகள் எல்லாம், ‘திருமணம் செய்தால் வந்தியத்தேவன் மாதிரி ஒருத்தரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வார்கள்’ என்று சொன்னார்.
அப்படி ஒரு லவ்வர் பாயா.. அம்மாடியோ.. என்று வியந்து போனேன். இதை எப்படி நாம் பூர்த்தி செய்யப் போகிறோம் என்று யோசித்தேன். மணி சார் இருக்கிறார். அவர் பார்த்துப்பார் என்ற தைரியத்தில் போய்விட்டேன். பிறகு வரலாறு படிக்கும் நண்பர் ஒருவரை அழைத்து வந்தயத்தேவன் பற்றி சொல்ல கேட்டு புரிந்து கொண்டேன்.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த அவரைப் பற்றி நான் புரிந்து கொண்டால்தான் நடிக்க முடியும் என்று கேட்டேன். அப்போது அவர் சொன்னார், வந்தயத்தேவன் ஒரு ஐஏஎஸ் ஆபீஸர் மாதிரி.. அவருடைய இடத்தில் குதிரை ஏற்றம், போர், நிர்வாகம் என அனைத்துக்குமே பயிற்சி இருக்கிறது. அவன் ஒரு இளவரசன், அவனுக்கு நாடே கிடையாது, ஆனால் அவன் அனைத்து ஆசையும் கொண்டவன் என்று சொன்னார்.
அந்த கேரக்டரை புரிந்து கொள்ள அவர் சொன்னது எனக்கு உதவியது. இந்த நாவலை எப்படி படமாக்குவது என்பது ஒரு சிக்கல் இருக்கிறது. இதை படிக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கற்பனை இருக்கும். பொன்னியின் செல்வன் நாவலை ஒரு 50 லட்சம் பேர் படித்திருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் மனதில் ஒரு வந்தியத்தேவன், ஒரு அருண்மொழிவர்மன், ஒரு ஆதித்ய கரிகாலன் இருப்பார்கள்.
ஆனால் இது மணிசாரின் கற்பனை, இது மிகவும் அழகாக இருக்கிறது. இதற்கு உங்களுடைய எல்லாருடைய ஆதரவும் தேவை. இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவமாக இருக்கும். நானும் ஜெயம் ரவியும் அடிக்கடி பேசிப்போம். இந்த படத்தின் நாட்களை விட்டு விட்டால் மீண்டும் கிடைக்காது.. ஒவ்வொரு நாளும் நாம் அனுபவிக்க வேண்டும் என்று பேசிக்கொள்வோம்.. நான் வியந்து பார்த்த கலைஞர்களின் அருகே இருந்து பணிபுரிய முடிந்தது. ஒரு சகோதரன் போல ஒரு நண்பன் கிடைத்தார் (ஜெயம் ரவியை பார்த்து). இந்த அற்புதமான பயணத்தை பற்றி அடுத்த அடுத்த மேடைகளில் நான் பேசுகிறேன்” என்று குறிப்பிட்டார்.
Also Read | பிரபல இயக்குநர் அமீரின் தாயார் மறைவு! திரையுலகம் இரங்கல்.