கடைசியாக கார்த்தி நடித்து வெளியாகி இருந்த திரைப்படம் 'சுல்தான்'. இதனைத் தொடர்ந்து விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்கள் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளது.
இதில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக, சர்தார் படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கி நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. சர்தார் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமாகி இருந்தது. அதன் பின்னர், கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
சர்தார் படத்தின் படப்பிடிப்பு
இதனைத் தொடர்ந்து, மீண்டும் சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் சர்தார் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது. கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், சர்தார் படத்திற்கு இசை அமைத்து வருகிறார். மேலும், பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குனர் மித்ரன், சர்தார் படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதில், வயதான தோற்றத்தில் கார்த்தி இருக்கும் லுக், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது.
ராஷி கண்ணா பகிர்ந்த BTS புகைப்படங்கள்
இந்த படத்தின் நாயகியான ராஷி கண்ணா, சர்தார் படத்தின் லொக்கேஷன் தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்து வந்தார். அந்த வகையில், மைசூரில் இருக்கும் புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் சமீபத்தில் பகிர்ந்து சூட் லொக்கேஷன் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மைசூர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் கார்த்தியுடன், ராஷி கண்ணா இருக்கும் BTS புகைப்படம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. க்ளீன் ஷேவ் லுக்கில் இருக்கும் கார்த்தியின் இந்த புகைப்படம், சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.