VIDEO: கார்த்தி நடிக்கும் 'சர்தார்'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தியின் 22வது படம் சர்தார் ஆகும்.

Advertising
>
Advertising

Also Read | பேங்காக் நகரில் அஜித்குமார்.. 20 லட்ச ரூபாய் சூப்பர் பைக்கில் சுற்றுப்பயணம்.. வைரல் ஃபோட்டோஸ்

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  'சர்தார்' படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் ரிலீஸை ஒட்டி சர்தார் படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக வீடியோவை வெளியிட்டு படநிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்  கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்தார் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவி கைப்பற்றி உள்ளது.

 

Also Read | VIDEO: கீர்த்தி சுரேஷின் 2 கோடி ரூபாய் சொகுசு கார்.. இவ்வளவு வசதிகள் இருக்கா? குட்டி கப்பல்!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Sardar CBFC Censored and Certified UA

People looking for online information on Karthi, Karthi Sardar Movie, Laila, Sardar, Sardar Movie updates will find this news story useful.