“மிரட்டும் டிரைலர்!.. அசுரன், ஜெய்பீம் நடிகரின் இயக்கத்தில் 'டாணாக்காரன்' ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம்பிரபு நடிப்பில் உருவாகியுள்ள டாணாக்காரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

Karthi released vikram prabhu taanaakaran trailer release
Advertising
>
Advertising

திடீரென்று வீட்டுக்கு வந்த JP… மாட்டுவாரா அசோக் செல்வன்? – வைரல் மன்மத லீலை sneak peek

கவனம் ஈர்த்த டாணாக்காரன்…

விக்ரம் பிரபு நடிப்பில் எஸ் ஆர் பிரபுவின் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம நிறுவனம் டாணாக்காரன் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. டாணாக்காரன் திரைப்படத்தின் கதைக்களம் 1998ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் இதற்கு முன் பல காவல்துறை சார்ந்த திரைப்படங்களைக் கண்டுள்ளது. ஆனால் டாணாக்காரன் காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள தமிழ் அரசன் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடிகராகவும் தமிழ் அரசன் கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் லால், எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.  மகேஷ்மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

எதிர்பார்ப்பை உருவாக்கிய டாணாக்காரன்…

படத்தின் போஸ்டர்களும் டீஸரும் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மாயா, மான்ஸ்டர், மாநகரம் உள்ளிட்ட தனிச்சிறப்பு கொண்ட படைப்புகளை வழங்கிய பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் சார்பாக. எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் உள்ளிட்டோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

கார்த்தி வெளியிட்ட டிரைலர்…

இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. டிரைலரில் PRS எனப்படும் போலீஸ் டிரெய்னிங் இடத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களையும் அதை எதிர்த்து எப்படி  விக்ரம் பிரபு போராடுகிறார் என்பதையும் விறுவிறுப்பாக காட்சிப் படுத்தியுள்ளனர். மிரட்டலாக உருவாகியுள்ள இந்த டிரைலர் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#jamesinott: புனீத் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி நியூஸ்… பிரபல ஓடிடி கொடுத்த update

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Karthi released vikram prabhu taanaakaran trailer release

People looking for online information on Anjali Nair, Ghibran, Lal, MS Bhaskar, S R Prabhu, Taanaakaran, Tamizh, Vikram Prabhu will find this news story useful.