EXCLUSIVE: கார்த்தி & ராஜூ முருகன் இணையும் புதிய படம்.. ஷூட்டிங் எப்போ? சரவெடி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி & ராஜூ முருகன் இணையும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இந்த 3 படங்கள் தான் சிவகார்த்திகேயனோட 'ALL TIME ஃபேவரைட்' படங்களாம்! முழு விவரம்

'விருமன்' படத்திற்கு பிறகு கார்த்தி நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்துக்குப் பிறகு இப்போது கார்த்தி சர்தார் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி உள்ளார்.

சர்தார் படம் நாளை (21.10.2022) ரிலீஸ் ஆகிறது. சர்தார் படத்தினை அடுத்து கார்த்தி, இயக்குனர் ராஜூமுருகனுடன் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தது.

சில மாதங்களுக்கு முன் விருமன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் ராஜூ முருகன் இந்த தகவலை உறுதி செய்தார். விருமன் படத்தில் மதுரை வீரன் பாடலை ராஜூ முருகன் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளரும், இயக்குனருமான ராஜூ முருகன் கடந்த 2014 ஆம் ஆண்டு 'குக்கூ' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கிய இரண்டாவது படம் ஜோக்கர். இது சமூகத்தை கேள்வி கேட்கும் நாயகனின் கதையை அடிப்படையாகக் கொண்டு தேசிய விருதை வென்றது. இந்தப் படம் பெரும்பான்மையான மக்களால் பாராட்டப்பட்டது. கடைசியாக 'ஜிப்சி' படத்தை ராஜூ முருகன் இயக்கினார்.

கார்த்தி & ராஜூ முருகன் இணையும் இந்த புதிய படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு 'ஜப்பான்' என்று பெயரிடப்பட்டுள்ளது என‌வும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சர்தார் படத்தின் ரிலீஸை ஒட்டி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு நடிகர் கார்த்தி பிரத்யேகமான பேட்டி அளித்துள்ளார். அதில் தனது அடுத்த படத்தை இயக்குனர் ராஜூ முருகன் இயக்க உள்ளார் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் முதல் துவங்கும் என்றும் கார்த்தி கூறியுள்ளார்.

Also Read | "போதும் டா வேலை செய்யலாம்".. கார்த்தி மடியில் அமர்ந்து கைதி BGM போட்டு லாரி ஓட்டிய ரித்து!

EXCLUSIVE: கார்த்தி & ராஜூ முருகன் இணையும் புதிய படம்.. ஷூட்டிங் எப்போ? சரவெடி அப்டேட் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Raju Murugan New Movie Exclusive Shooting Update

People looking for online information on Karthi, Raju murugan, Sardar will find this news story useful.