"சர்தார்" படத்துக்காக களமிறங்கிய கார்த்தி.. இயக்குனர் P.S.மித்ரன் வெளியிட்ட ஜாலியான வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | Parampara season 2 : டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரின் விறுவிறுப்பான தொடர்.. ‘பரம்பரா சீசன் 2’

கார்த்தி நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் 'சுல்தான்'. இந்த சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்துக்குப் பிறகு இப்போது கார்த்தியின் கைவசம் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன.

இவை அடுத்தடுத்து இந்த ஆண்டுக்குள் ரிலீஸாகின்றன. இதில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்து விட்டன. இதன் பின் தயாரிப்பு பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் படம், செப்டம்பர் 30 அன்றும், விருமன் படம் ஆகஸ்ட் 31 அன்றும் ரிலீஸ் ஆகின்றன.

இந்த சர்தார் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த 'சர்தார்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார். சர்தார் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவி கைப்பற்றி உள்ளது.

இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நடிகர் கார்த்தி தனது கதாபாத்திரத்தின் டப்பிங் பணிகளை நேற்று மாலை துவங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோவை இயக்குனர் மித்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், நாயகன் கமல்ஹாசன் சாயலில் வசனத்தை உச்சரிக்க இயக்குனர் மித்ரன் காரத்தியிடம் கேட்கிறார். அதற்கு நடிகர் கார்த்தி "நமக்கு எது வருமோ அதை மட்டும் பண்ணுவோம்" என நகைச்சுவையாக பதில் அளிக்கிறார்.

பின்னர் " நாலு பேருக்கு நல்லது பண்ணாலும் 40,000 பேருக்கு தெரியிற மாதிரி பண்ணனும்" என்ற வசனத்தை கார்த்தி டப்பிங் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்  கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | Video: “Love பண்ணேன்.. எனக்காக 16 நாள் குடிக்காம இருந்தான்.. ” - Sreenidhi பேட்டி | shakeela

"சர்தார்" படத்துக்காக களமிறங்கிய கார்த்தி.. இயக்குனர் P.S.மித்ரன் வெளியிட்ட ஜாலியான வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Karthi PS Mithran Sardar movie Dubbing work started

People looking for online information on Karthi, PS Mithran, Sardar movie, Sardar movie Dubbing work, Sardar Movie updates will find this news story useful.