பிரகாஷ் ராஜை வெறுப்பேற்றும் கார்த்தி.. வைரலாகும்'விருமன்' படத்தின் SNEEK PEEK காட்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தின் SNEEK PEEK வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நம்ம ஊரு.. நம்ம கதை... கார்த்தி வெளியிட்ட 'விருமன்' படத்தின் புதிய GLIMPSE!

சூர்யா- ஜோதிகாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் கார்த்தி 'விருமன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கி முடித்துள்ளார்.

நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படம் நாளை ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.  இந்த படத்தின் கேரள வினியோக உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனமான Fortune சினிமாஸ் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி இந்த படப்பிடிப்பு முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் SNEEK PEEK காட்சி வெளியாகி உள்ளது. தாசில்தார் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்தை அடித்த சுரேஷ் கதாபாத்திரத்திற்கு நடிகர் கார்த்தி தங்க மோதிரம் போடுவது போல இந்த காட்சி அமைந்துள்ளது. நடிகர் சூரி மற்றும் கார்த்தியின் நடனத்துடன் இந்த காட்சி துவங்குகிறது. பிரகாஷ் ராஜ் கோபப்பட்டு துப்பாக்கி எடுப்பதுடன் இந்த காட்சி நிறைவடைகிறது. சிங்கம்புலி மற்றும் மைனா நந்தினி ஆகியோரும் இந்த காட்சியில் தோன்றியுள்ளனர்.

Also Read : இமான் இசையில்.. ஸ்ரேயா கோஷல் பாடிய டூயட்.. Captain படத்தின் அடுத்த Single!

பிரகாஷ் ராஜை வெறுப்பேற்றும் கார்த்தி.. வைரலாகும்'விருமன்' படத்தின் SNEEK PEEK காட்சி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Prakash Raj Viruman Movie SNEEK PEEK Video Released

People looking for online information on Karthi, Prakash Raj, Viruman, Viruman Movie SNEEK PEEK Video will find this news story useful.