நடிகர் சங்க தேர்தல் வெற்றி பெற்ற பாண்டவர் அணி… முதலில் சந்தித்தது யாரை தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர் தமிழக முதல்வர்  மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

Advertising
>
Advertising

போடு சக்க! அஜித்தின் வலிமை.. வெளியானது ஓடிடி டிரைலர்! இது செம்ம மாஸா இருக்கே….

நடிகர் சங்க தேர்தல்

நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன்.23ம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் நாசர், கார்த்தி, விஷாலின் பாண்டவர் அணியினரும், பாக்யராஜ், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தடையால் இரண்டு ஆண்டுகள் தாமதம்

இந்நிலையில், துணைநடிகர் பெஞ்சமின் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்த தேர்தலில் தன்னை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்றும், அதனால் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்றும் வழக்குத் தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த  நீதிபதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். ஏற்கனவே நடிகர் விஷால் தொடர்ந்த  ரிட் வழக்கில் வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டாலும், முடிவுகளை வெளியிட கூடாது என்று  தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தவும் முடிவுகளை அறிவிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

வாக்கு எண்ணிக்கையும் முடிவும்…

அதன் படி நேற்று முன் தினம் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், கார்த்தி, விஷால், பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாண்டவர் அணியினர் மீண்டும் நடிகர் சங்க பொறுப்புகளைக் கையில் எடுத்துள்ளனர்.

பாண்டவர் அணியின் வாக்குறுதி

மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் நாசர் ‘நாங்க எடுத்துகிட்ட வேலையின் பளு 100 மடங்கு அதிகமாகி இருக்கு. பொதுக்குழு அமைக்கனும். நிச்சயமா விடுபட்ட எல்லா வேலைகளும் செய்ய ஆரம்பிப்போம். முதலில் செயற்குழு கூட்டி முடிவெடுப்போம்’ எனக் கூறியிருந்தார்.

அதுபோலவே பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி  ‘இந்த வெற்றி எங்க டீமோட அயராத உழைப்பு. இன்னைக்கு கெடச்சிருக்க வெற்றி முக்கியமானது. 2 வருட சட்டபோராட்டத்துக்கு பிறகு கிடைத்த முக்கியமான வெற்றி.. இப்ப கிடைச்சுருக்குற பொறுப்ப வச்சு அந்த கட்டிடத்த முடிக்கணும்கிறதுதான் எங்களோட ஆச. மக்களுக்கும் எங்க டீமுக்கும், மீடியாவுக்கும் நன்றி’ எனக் கூறியிருந்தார்.

முதல்வரை சந்தித்த பாண்டவர் அணி

இந்நிலையில் தற்போது வெற்றி பெற்ற பாண்டவர் அணியின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, செயலாளர் விஷால், துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.  இந்த சந்திப்பின் போது நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“7 வருஷத்துக்கு அப்புறம் வர்றேன்”… சூப்பர் அப்டேட் கொடுத்த பிரேமம் இயக்குனர்!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Nasser vishal and pandavar team met CM Stalin

People looking for online information on நடிகர் சங்க தேர்தல், பாண்டவர் அணி, CM MK Stalin, CM Stalin, Karthi, Nasser, Pandavar team, Vishal will find this news story useful.