பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார்.

முன்னதாக கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருக்கும் கார்த்தியின் நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த சர்தார் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராகவும் கலை இயக்குனராக கதிரும் பணியாற்றியுள்ளனர்.
சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், நடிகர் கார்த்தி இப்படத்தில் பணிபுரிந்த அசிஸ்டண்ட் மற்றும் அசோசியேட் இயக்குனர்களை சந்தித்திருக்கிறார். சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் அவர்களை சந்தித்த கார்த்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.