உதயநிதி ஸ்டாலினை சந்தித்த நடிகர் கார்த்தி.. வெளியான சந்திப்பின் பின்னணி தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தியின் 22வது படமான 'சர்தார்' படம் தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Karthi Met Red Giant Movies Udhayanidhi Stalin
Advertising
>
Advertising

Also Read | நடிகர் அஜித்துடன் 'துணிவு' படத்தின் முதன்மை டெக்னீசியன்.. வைரலாகும் தெறி புகைப்படங்கள்!

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்ற, பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றி உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில்  “சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை நடிகர் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர்  S.லக்‌ஷ்மன் குமார் இன்று நேரில் சந்தித்து தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி திரு C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Also Read | மகனுடன் தீபாவளி கொண்டாடிய எமி ஜாக்சன்.. பட்டாசு வெடிக்கும் போது கொடுத்த ரியாக்ஷன் தான் செம!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Met Red Giant Movies Udhayanidhi Stalin

People looking for online information on Karthi, Red Giant Movies, Udhayanidhi Stalin will find this news story useful.