SARDAR : "இப்படி ஒருத்தர் வெளியே தெரியாமலே இருந்துருக்காரு".. சர்தார் விழாவில் கார்த்தி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிப்பில் 'சர்தார்' படம் தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்ற, பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "இந்திய சினிமாவில் MASTERPIECE".. 'காந்தாரா' படம் பார்த்து வியந்த ரஜினிகாந்த்! வைரல் ட்வீட்

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ரஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  இந்நிலையில் சர்தார் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட அப்படக் குழுவினர்கள் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

இப்படம் குறித்து நடிகர் கார்த்தி பேசும்போது, “தனிப்பட்ட நபர் முன்னேற வேண்டும் என்றில்லாமல் ஒரு குழுவாக பணியாற்றிய அனுபவம் எனக்கு அனைத்து படங்களிலும் கிடைத்தது. நானும் தயாரிப்பாளர் லக்ஷ்மனும் எல்.கே.ஜி.-யில் இருந்து நண்பர்கள். அனைத்து அழுத்தத்தையும் தாங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே இருப்பார். இப்படத்தின் கதையைக் கூறிவிடலாம். ஆனால், காட்சிப்படுத்துவது மிகவும் சிரமம். ஒவ்வொரு காட்சியும் மென்மேலும் சிறப்பாக வருவதற்கு அனைவரும் குழுவாக இருந்து பணியாற்றினார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவையோ அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார். உதாரணத்திற்கு பாகிஸ்தான் ராணுவ தளத்தை அமைப்பது எளிதல்ல. பார்க்கும்போதே பயம் வர வேண்டும்.

சமீப காலமாக தியாகம் என்கிற ஒரு விஷயத்தை கேள்விப்படவில்லை. ஆனால், நாட்டிற்காக தியாகம் செய்தவர் வெளியே தெரியாமல் இருக்கிறார். அதை ஒரு படத்திலேயே அடக்கி, தீவிரமாக கொடுத்த மித்ரனுக்கு நன்றி. மித்ரனும், ரூபனும் பெரிய மேஜிக் செய்திருக்கிறார்கள். மேலும், ஒவ்வொரு வேடத்திற்கு மேக்கப் போடும் போது சிரமமாக இருக்கும். அதை கலைக்கும் போது முகம் எரியும். இதைவிட பெரிய ஜாம்பவான்கள் அதிகமாக கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று என் கோபத்தை நானே கட்டுப்படுத்திக் கொள்வேன்.

எனக்காவது 6 மணி நேரம் தூக்கம் கிடைக்கும், ஆனால், ஜார்ஜ்க்கு அதுகூட இருக்காது. அனைவரின் குடும்பத்தாரும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அனைவரின் உழைப்பை வெளியே தெரியும்படி செய்த மித்ரனுக்கு நன்றி. படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாக கோபப்பட்டேன். அதுவும், மேக்கப் போட்டால் ஹல்க் மாதிரி கோபம் வரும். ஆனால், அது எல்லாமே படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக தான். ஜிவியின் இசை தத்ரூபமாக இருந்தது. லைலா மேடம் மிகவும் சந்தோஷப்பட்டார். ரஜிஷா மற்றும் ராஷியும் மகிழ்ச்சியடைந்தார்கள். குட்டி பையன் ரித்துவை அனைவரும் பாராட்டுகிறார்கள். முனீஷ்காந்த் அருமையான நடிகர். அவரால் எந்த சந்திப்பிலும் கலந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கேட்டதற்காக ஒரு பாடலுக்கு நடனமாடி கொடுத்த மைனாவிற்கு நன்றி” என்றார்.

Also Read | Bigg boss 6 tamil : “கமல் சார் குறும்படத்த போடட்டும்.. நான் பிக்பாஸ விட்டே போறேன்!”- தனலட்சுமி ஆவேசம்

Tags : Sardar, Karthi

தொடர்புடைய இணைப்புகள்

Karthi mass speech in Sardar success meet

People looking for online information on Karthi, Sardar will find this news story useful.