BREAKING: பொன்னியின் செல்வன் பட டப்பிங்கை முடித்த முன்னணி நடிகர்கள்! இவங்க தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

Advertising
>
Advertising

பொன்னியின் செல்வன் எனும் PS1

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் பட நிலை

படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன, நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான வித்யா சுப்ரமணியன் இந்த படத்திற்கான டப்பிங் பேசும் பணிகளை முதன் முதலாக தொடங்கினார். பின் நடிகை த்ரிஷா டப்பிங் பேசி முடித்தார். இந்நிலையில் நடிகர் கார்த்தியும், ஜெயம் ரவியும் டப்பிங் பேசி முடித்துள்ளனர் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் ராஜ ராஜசோழனாக (அருள் மொழிவர்மன்) (பொன்னியின் செல்வன்)  ஜெயம் ரவி நடித்துள்ளார். வந்தியத்தேவனாக கார்த்தி நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர்

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Karthi & Jayam Ravi completed Ponniyin Selvan dubbing

People looking for online information on கல்கி கிருஷ்ணமூர்த்தி, பொன்னியின் செல்வன், மணிரத்னம், Jayam Ravi, Karthi, Ponniyin Selvan will find this news story useful.