சென்னை: கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
Also Read | "நாம கொடுக்குறதுதான் பிளாக் பஸ்டர்" - Ponniyin Selvan பட விழாவில் திரிஷா மாஸ் பேச்சு!
பொன்னியின் செல்வன் ரிலீஸ்
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன்
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சோழப்பேரரசின் பொற்காலம்
சோழப்பேரரசின் பொற்காலம் துவங்கும் காலக்கட்டத்தை ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து திரைக்குக் கொண்டு வரவிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் பட விழாவில் இயக்குநர் மணிரத்னம், இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சோழர்குலத்தின் மணி விளக்கு
இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, “சுந்தரச் சோழரின் செல்வத்திருமகள், ஆதித்ய கரிகாலனுக்கு முன்பிருந்தவள், அருள்மொழிவர்மனுக்கு பின் பிறந்தவள், சோழர்குலத்தின் மணி விளக்கு இளைய பிராட்டி குந்தவை தேவியை மேடைக்கு அழைக்கிறேன்!” என்று நடிகர் கார்த்தி அறிமுகம் கொடுத்து இருந்தார். அதன் பின்னர் இந்த அழைப்பை ஏற்று முரசு கொட்ட, மேடைக்கு வருகை தந்தார் நடிகை திரிஷா.
Also Read | சிம்பு - கௌதம் கார்த்திக் இணையும் 'பத்து தல' - வெளியானது அடுத்த அப்டேட்!