VIJAYAKANTH: "விஜயகாந்த்னாலே இதான் நியாபகம் வரும்" - நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய கார்த்தி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்திற்கு நேரில் வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் சங்கத்தின் பொருளாளர் நடிகர் கார்த்தி.

Karthi Birthday wishes to vijayakanth Behalf nadigar sangam
Advertising
>
Advertising

Also Read | 7 வித்தியாசமான கெட் அப்-களில் விக்ரம்.. வெளிவந்த 'கோப்ரா' படத்தின் மிரட்டலான டிரெய்லர்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராக கேப்டன் விஜயகாந்த் முந்தைய வருடங்களில் பணிபுரிந்துவந்தார். அவரது பங்களிப்பு குறித்து நடிகர்கள் பலரும் பேசியுள்ளனர். இந்த நிலையில் தான் நடிகர் விஜயகாந்த்தின் 70 வது பிறந்த நாளான இன்று, அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Karthi Birthday wishes to vijayakanth Behalf nadigar sangam

அந்த வகையில் நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்கத்தின் பொருளாளர் நடிகர் கார்த்தி நேரில் சென்று மலர்கொத்து கொடுத்து விஜயகாந்த்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இவருடன் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்களான பிரேம்குமார், ஹேமசந்திரன் ஆகியோர் இருந்தார்கள்.

நடிகர் விஜயகாந்தை சந்தித்து பிறந்த நாளுக்கு சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்த பின், இதுபற்றி நடிகர் கார்த்தி கூறும்போது, “விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அவருடைய தைரியம் தான். அதேபோல், அவரது இல்லத்துக்கும் அலுவலகத்துக்கும் யார் வந்தாலும் சாப்பிடலாம் என்று சிறு வயதிலிருந்தே கேள்விபட்டிருக்கிறேன். யாரிடமும் எந்த பாகுபாடும் இல்லாமல் அன்பு காட்டுவது எவ்வளவு பெரிய விஷயம். இப்படி ஒரு மனிதரை அவருடைய பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவதுதான் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். அதிலும் சங்கம் சார்பாக வந்து வாழ்த்தியது நிறைவாக உள்ளது” என்று கூறினார்.

Also Read | PS1 பொன்னியின் செல்வன் படத்தின் இதுவரை காணாத BTS.. கூட யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Birthday wishes to vijayakanth Behalf nadigar sangam

People looking for online information on Karthi, Nadigar sangam, Vijayakanth will find this news story useful.