"TOP டூ BOTTOM முழுக்க கோல்டு தான்".. வித்தியாசமான கெட் அப்பில் கார்த்தி.. JAPAN FIRST LOOK!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி & இயக்குனர் ராஜூ முருகன் இணையும் 'ஜப்பான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை ICU-வில் அனுமதி.. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. சமீபத்தில், 'விருமன்', 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' உள்ளிட்ட படங்கள் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகி பெரிய அளவில் ஹிட்டாகியும் இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார். குக்கூ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜூ முருகன், ஜோக்கர் திரைப்படத்தை இரண்டாவதாக இயக்கி இருந்தார். மக்கள் மத்தியில் அதிக அளவு பாராட்டுக்களை பெற்ற இந்த திரைப்படம், தேசிய விருதையும் வென்றிருந்தது. ஜோக்கர் படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவாவை வைத்து 'ஜிப்ஸி' என்ற திரைப்படத்தையும் ராஜு முருகன் இயக்கி இருந்தார்.

இதற்கு அடுத்தபடியாக கார்த்தியை வைத்து 'ஜப்பான்' திரைப்படத்தை இயக்க உள்ளார் ராஜூமுருகன். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். நடிகர் கார்த்தியின் 25 வது படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் ரவிவர்மன் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளார். அதேபோல ஜிவி பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரபல நடிகை அனு இம்மானுவேல் முதல் முறையாக இணைந்து நடிக்க உள்ளார். ஜப்பான் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (14.11.2022) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சோஃபா ஒன்றில் நடிகர் கார்த்தி தூங்குவது போல இருக்க, அதன் மேலே உள்ள ஃபோட்டோ பிரேமில் கையில் துப்பாக்கியுடன் கார்த்தி நிற்கிறார். வித்தியாசமாக மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும் ஜப்பான் படத்தின் போஸ்டர் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது. இந்த போஸ்டரை பிரபல டிசைனர் டியூனி ஜான் வடிவமைத்துள்ளார்.

ஜப்பான் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | Childrens Day தினத்தன்று.. ராஷ்மிகா பகிர்ந்த 'இன்ஸ்டா' பதிவு.. வைரலாகும் கேப்ஷன்!!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi and raju murugan japan movie first look released

People looking for online information on GV Prakash Kumar, Japan movie first look poster, Jappaan Movie, Karthi, Rajumurugan will find this news story useful.