கமல்ஹாசன் , கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள இயக்குநர் ஜித்து ஜோசஃப். இவர் கார்த்தி, ஜோதிகா ஆகியோரது நடிப்பில் ஒரு தமிழ் படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும் இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.
