நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தி தயாரிப்பில், கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, சூர்யாவின் தம்பி கார்த்தி நாயகனாக நடிக்கும் திரைப்படம் “விருமன்”.

அதிதி ஷங்கர்
கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி மதுரையில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் இன்னொரு முக்கிய ஸ்பெஷல் அதிதி ஷங்கர். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுக நாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் கனமான பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு
முன்னதாக மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் 21ம் தேதி முடைவடைந்த இந்த படப்பிடிப்பு குறித்து பேசியிருந்த நடிகர் கார்த்தி, நீண்ட நாட்களுக்கு பின் மதுரை மக்களை பார்த்து சந்தோஷமடைவதாக முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
படத்தில் இணைந்த நடிகர்கள்
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும இப்படத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கருடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, மைனா நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
Also Read: நிரூப்க்கு முத்தம் கொடுத்த பாவனி!.. அதிர்ந்த அமீர்! அப்பவே ஹேர் கட் பண்ணிருக்கலாமோ!
கிராமத்து பின்னணியில், உருவாகும் இப்படமும் எப்போதும் போல் இயக்குநர் முத்தையாவின் பாணியில் உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாவதாக கூறப்பட்டிருந்தது. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் இந்த படத்தை இணைந்து தயாரிக்கிறார்.
first look போஸ்டர்
S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கிறார். ஏற்கனவே இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் ‘கொம்பன்’ படத்தில் கார்த்திக்கும், அவருடன் இணைந்து நடிகர் ராஜ்கிரணும் நடித்திருந்தனர். இந்நிலையில் விருமன் திரைப்படத்தின் நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் வெளியாகியுள்ளது.
ஆம், கார்த்தி, அதிதி ஷங்கர் நடிக்கும் விருமன் படத்தின் first look போஸ்டர், பொங்கல் தினத்தன்று ஜனவரி 14-ஆம் தேதி, காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.