டிவி சேனலில் ஒளிபரப்பாக போகும் கர்ணன்! எந்த சேனல்ல? எந்த தேதில? எத்தனை மணிக்கு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில் கடந்த ஏப்ரலில் வெளியான "கர்ணன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

வணிக ரீதியிலும், கலை ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தன. படத்தின் வெற்றிக்கு பாடல்கள் மிக முக்கிய காரணமாக அமைந்தன.

இந்த படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியது. ஒடிடி பிரீமியர் மே 14ம் தேதி ஒளிபரப்பானது. இந்த படத்தின் தொலைக்காட்சி சேட்லைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது. ஆகையால் கர்ணன் படத்தின் தொலைக்காட்சி பிரீமியரை ஒளிபரப்பாக உள்ளதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

ஏற்கனவே நாம் கணித்தது போல ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்ணன் படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

இதற்கான முன்னோட்டத்தை ஜீ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

Karnan movie television premiere date announced

People looking for online information on Dhanush, Karnan, Mari Selvaraj will find this news story useful.