நேற்று காலர் டாஸ்க்கை அடிப்படையாக வைத்து போட்டியாளர்கள் ஒன்று முதல் 13 வரை தங்களை வரிசைப்படுத்த வேண்டும் என பிக்பாஸ் அறிவித்தார். இதையடுத்து போட்டியாளர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசனை செய்தனர். மேலும் வாக்கெடுப்பு நடத்தி அவரவர் வரிசையை முடிவு செய்தனர்.
இதில் முதல் இடத்தை ஆரியும், 2-வது இடத்தை சனமும், 3-வது இடத்தை பாலாஜியும் பிடித்தனர். இதுகுறித்த விவாதத்தின்போது பாலாஜி-சனம் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்து சண்டையாக மாறியது. அப்போது பாலாஜி சனம் ஒரு கால் மட்டும் அட்டெண்ட் செய்ததால் அவருக்கு அந்த இடத்தில் நிற்க தகுதி இல்லை என்று வாதம் செய்தார். பதிலுக்கு சனம் அது என்னோட தப்பு கெடையாது.
எனக்கு கால் வரல. ஆனா ஒரு கால் பேசினாலும் நான் கரெக்டா தான் பேசுனேன் என்றார். இதற்கிடையில் பாலாஜி கையை நீட்டி பேச, என்கிட்ட கையெல்லாம் நீட்டி பேசாதீங்க என சனம் அவரை எச்சரித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் முன்பு ஆரி பேசும்போது பாலாஜி அவரிடம் என்கிட்ட கையை நீட்டி பேசாதீங்க என்று கூறியதை வைத்து குறும்படம் போட்டு 'கர்மா இஸ் எ பூமராங்' என கலாய்த்து வருகின்றனர்.