புனித் பிரேதத்துக்கு முத்தமிட்டு கண்கலங்கிய கர்நாடக முதல்வர்!... உருக்கமான வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பெங்களூருவில் காலமான கன்னட இளம் நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோ பரவி வருகிறது.

karanataka cm basavaraj bommai kisses puneeth rajkumar corpse
Advertising
>
Advertising

உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட புனித் ராஜ்குமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

karanataka cm basavaraj bommai kisses puneeth rajkumar corpse

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனும், கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் சகோதரருமான புனித் ராஜ்குமார், இலவச பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லங்கள், மாணவர்களின் கல்வி உதவி என பல நலத்திட்டங்களை செய்ததுடன் தனது 2 கண்களையும் தானம் செய்துள்ளார்.

இத்தகைய மனிதரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் கர்நாடகாவின் பெங்களூருவில் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள புனித்தின் பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21  குண்டுகள் முழங்க  முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வுக்கு வருகை தந்தார் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, புனித் ராஜ்குமாரின் பிரேதத்தை தொட்டு வணங்கி, முத்தம் கொடுத்து கலங்கினார். இந்த வீடியோ காண்போரை உருக்கி வருகிறது.

புனித் பிரேதத்துக்கு முத்தமிட்டு கண்கலங்கிய கர்நாடக முதல்வர்!... உருக்கமான வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Karanataka cm basavaraj bommai kisses puneeth rajkumar corpse

People looking for online information on Puneeth rajkumar, PuneethRajkumarFuneral, RIP, RIPPuneethRajukumar will find this news story useful.