"நீங்க உங்க EX கூட.." கரண் ஜோஹர் கேட்ட பரபரப்பு கேள்வி.. கொஞ்சம் கூட அசராம ஜான்வி சொன்ன பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில், கரண் ஜோஹர் கேட்ட பரபரப்பான கேள்வியும், அதற்கு நடிகை ஜான்வி கபூர் தெரிவித்த அதிரடி பதிலும், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

karan johar questions about ex to janhvi kapoor and she answer
Advertising
>
Advertising

பாலிவுட் திரை உலகின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜான்வி கபூர். பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' என்னும் திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகம் ஆகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சில படங்கள் நடித்து வந்த ஜான்வி கபூர், தமிழில் நயன்தாரா நடிப்பில், நெல்சன் இயக்கி இருந்த "கோலமாவு கோகிலா" படத்தின் ஹிந்தி ரீமேக்கில், முதன்மை கதாபாத்திரத்திலும் தற்போது நடித்துள்ளார். "குட் லக் ஜெர்ரி" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், வரும் ஜூலை 29 ஆம் தேதி, டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
karan johar questions about ex to janhvi kapoor and she answer

இந்நிலையில், சமீபத்தில் ஹிந்தியில் பிரபல நிகழ்ச்சியான காஃபி வித் கரணில், நடிகைகள் ஜான்வி கபூர் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.  தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கரண் ஜோஹர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில், ஜான்வி கபூர் மற்றும் சாரா அலிகான் ஆகியோர், ஏராளமான திரைப்பட அனுபவங்கள் குறித்து பல விதமான சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அது மட்டுமில்லாமல், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஏராளமான விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாகவும் அவர்கள் இருவரும் பேசி இருந்தனர்.

அப்படி ஒரு சூழ்நிலையில், ஜான்வியிடம் கரண் ஜோஹர் கேட்ட ஒரு பரபரப்பான கேள்வி தான், இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. அந்த வகையில், ஜான்வி கபூரிடம், "நீங்கள் உங்கள் முன்னாள் காதலனுடன் உடலுறவு வைத்துக் கொள்வீர்களா?" என்று கரண் ஜோஹர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜான்வி, "இல்லை. என்னால் இனிமேல் பின்னோக்கி செல்ல முடியாது" என்று வெளிப்படையாக பதில் அளித்தார். கரண் ஜோஹர் கேட்ட கேள்விக்கும், அதற்கு சற்றும் அசராமல் உடனடியாக ஜான்வி சொன்ன பதில் தொடர்பான வீடியோக்களும் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பான கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Karan johar questions about ex to janhvi kapoor and she answer

People looking for online information on Janhvi Kapoor, Karan Johar, Sara Ali Khan will find this news story useful.