KANTARA: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற 'காந்தாரா' இயக்குனர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிரபல நடிகர் - இயக்குனர் ரிஷப் ஷெட்டி சந்தித்துள்ளார்.

Kantara Rishab Shetty Met Super Star Rajinikanth
Advertising
>
Advertising

கன்னட மொழியில் உருவாகிய ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான காந்தாரா செப்டம்பர் 30 அன்று கன்னட மொழியில் வெளியானது.

காந்தாரா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல  விமர்சனங்களைப் பெற்றது. இதனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் படத்தின் வசூல் அதிகரித்தது. இதே தலைப்புடன் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டிலும்  வெளியாகி உள்ளது.

Kantara Rishab Shetty Met Super Star Rajinikanth

கேஜிஎஃப் புகழ் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள இந்தப் படம் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது.

படத்தைப் பார்த்த திரைப்பட ஆர்வலர்கள் ரிஷப் ஷெட்டியின் (குறிப்பாக கிளைமாக்ஸில்) மற்றும் படத்தில் வரும் மண் சார்ந்த பாத்திரங்களின் அசாத்திய நடிப்பினை பாராட்டி வருகின்றனர்.

இந்த படத்தினை பார்த்த பிறகு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்தார். அதில், "தெரிந்ததை விட தெரியாதது அதிகம்" ஹோம்பலே பிலிம்ஸ் & கந்தாரா திரைப்படத்தை விட சினிமாவில் யாரும் இதை சிறப்பாக சொல்லியிருக்க முடியாது. நீங்கள் என்னை புல்லரிக்க வைத்துவிட்டீர்கள் ரிஷப் ஷெட்டி. எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகராக ரிஷப் உங்களுக்கு வாழ்த்துகள். இந்திய சினிமாவில் இந்த தலைசிறந்த படைப்பின் ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துகள்" என ரஜினிகாந்த் ட்வீட் செய்தார். பதிலுக்கு ரிஷப் ஷெட்டி நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குனர் - நடிகர் ரிஷப் ஷெட்டி சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் தான் என ரிஷப் ஷெட்டி ட்வீட் செய்திருந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தை ரிஷப் சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Kantara Rishab Shetty Met Super Star Rajinikanth

People looking for online information on Rajinikanth, Rishab Shetty, Super Star Rajinikanth will find this news story useful.