பிரதமரை சந்தித்த KGF யாஷ் & ‘காந்தாரா’ இயக்குநர்..! வைரலாகும் ஃபோட்டோஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள  ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரபல அஜித் படத்தில் நடித்த Bigg Boss நடிகை இப்போ விஜய்யின் LEO படத்திலா..?

காந்தாராவில் ஆடுகளம் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார் (விக்ரம் வேதா, ரஜினி முருகன், வலிமை, தேஜாவு), பிரமோத் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அஜனீஷ் லோக்நாத்தின் (குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர்) இசை படத்தின் இன்னொரு பலமாக அமைந்தது.

திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது. உலகம் முழுக்க ரூ.400 கோடி வரை வசூலித்தாக கூறப்படும் இப்படம் பின்னர் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இந்த படம் தற்போது பிரபல அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனிடையே காந்தாரா படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் ரிஷப் ஷெட்டி, “பலரும் காந்தாரா படத்தின் அடுத்த பார்ட்.. அதாவது பார்ட் - 2 எப்போது வரும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், நீங்கள் பார்த்ததுதான் 'காந்தாரா' படத்தின் 2-ம் பாகம்.  ஆம், இப்படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் வரும். அதில் பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயம், குறிப்பிட்ட அந்த தெய்வத்தின் பின்னணி கதைகள் உள்ளிட்டவை காந்தாராவின் அடுத்த பாகத்தில் வெளிவரும். அதற்கான கதை பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதால் காந்தாராவின் அடுத்த பாகம் பற்றிய விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பெங்களூர் சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைக்க கர்நாடகா வந்த பிரதமர் மோடியை கேஜிஎஃப் அட நாயகன் யாஷ் மற்றும் காந்தாரா பட இயக்குநர் ரிஷப் ஷெட்டி, இவர்களுடன் இவ்விரு படங்களின் தயாரிப்பி நிறுவனமான ஹோம்பாலே படத் தயாரிப்புக்குழுவினர், மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் குடும்பத்தினர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. முன்னதாக காந்தாரா படத்தை கலாச்சாரம் மற்றும் எடுத்துரைக்கும் படமாக குறிப்பிட்டு பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து ஜவஹர் மித்ரனின் அடுத்த பட டைட்டில்.. மாஸ் தகவல்.

தொடர்புடைய இணைப்புகள்

Kantara Rishab Shetty KGF Yash Meet PM Narendra Modi

People looking for online information on Hombale Production, Kantara, Narendra Modi, Prime Minister, Rishab Shetty will find this news story useful.