KANTARA: முதல்நாள் 10 தியேட்டர்.. 4 வது வாரத்தில் 150.. தமிழகத்தில் 'காந்தாரா' வேறலெவல் சம்பவம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னட மொழியில் உருவாகிய ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான 'காந்தாரா' செப்டம்பர் 30 அன்று கன்னட மொழியில் வெளியானது.

Advertising
>
Advertising

Also Read | SARDAR: முதல் வாரத்தை விட 2வது வாரத்தில் அதிக தியேட்டர்கள்.. செம மாஸ் காட்டும் 'சர்தார்'!

காந்தாரா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல  விமர்சனங்களைப் பெற்றது. இதனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் படத்தின் வசூல் அதிகரித்தது. இதே தலைப்புடன் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டிலும்  வெளியாகி உள்ளது.

கேஜிஎஃப் புகழ் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள இந்தப் படம் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது.

படத்தைப் பார்த்த திரைப்பட ஆர்வலர்கள் ரிஷப் ஷெட்டியின் (குறிப்பாக கிளைமாக்ஸில்) மற்றும் படத்தில் வரும் மண் சார்ந்த பாத்திரங்களின் அசாத்திய நடிப்பினை பாராட்டி வருகின்றனர்.

காந்தாராவில் ஆடுகளம் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார் (விக்ரம் வேதா, ரஜினி முருகன், வலிமை, தேஜாவு), பிரமோத் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத்தின் (குரங்கு பொம்மை) இசை படத்தின் இன்னொரு பெரிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

இந்த படம் தற்போது நான்காவது வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக வினியோகஸ்தர் எஸ். ஆர். பிரபு தனது முகநூல் பக்கத்தில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், காந்தாரா திரைப்படம் முதலில் 10 திரையரங்க திரைகளில் வெளியானது. தற்போது நான்காவது வாரத்தில் 150 திரையரங்க திரைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்கும் அனுபவத்தை தவற விடாதீர்கள். இந்த படம் தியேட்டரில் காண வேண்டிய படம் " என பிரபு பதிவிட்டுள்ளார்.

Also Read | 'துணிவு' படத்தில் இணைந்த 'சதுரங்க வேட்டை' நடிகர்.. அவரே வெளியிட்ட பரபர அப்டேட்!

Kantara Movie Tamil Nadu Theatre Count Increased

People looking for online information on காந்தாரா, Kantara will find this news story useful.