சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமான சீரியல் ‘கண்ணான கண்ணே’.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சீரியலின் சிறப்பு ஒரு மணி நேர காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பிரபல பிக்பாஸ் நடிகரும் திரைப்பட நடிகருமான கணேஷ் வெங்கட்ராமன் சிறப்பு கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
தற்போது இந்த சீரியலில் யுவா மற்றும் மீரா இருவரும் காதலித்து வந்த நிலையில், மீரா தன் காதலை தியாகம் செய்துவிட்டு, யுவாவும் தன் தங்கை ப்ரீத்தியும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். ப்ரீத்தியும் யுவாவை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்து வந்தார்.
இதனிடையே மீரா மற்றும் யுவாவை சேர்த்து வைப்பதற்கு மீராவின் சித்தி, மாமா என பலரும் முயற்சித்தனர். எனினும் எல்லா கட்டத்தையும் தாண்டி முகூர்த்தம் வரை பிரீத்தி யுவாவின் திருமணம் சென்றது. இதனிடையே மணமேடையில் ப்ரீத்தி கழுத்தில் தாலிகட்டும் நிமிடம் வரை சென்று, கடைசி நிமிடத்தில் மாப்பிள்ளை யுவா, மீரா கழுத்தில் தாலி கட்ட முயன்றார். இந்த ப்ரோமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் சீரியலில் என்ன நடந்தது தெரியுமா?
ஆனால் அங்கு நடந்த மிகப் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால், உண்மையில் மீரா கழுத்தில் யுவா தாலி கட்டவில்லை. அதற்குள் “கல்யாணத்தை நிறுத்துங்க” என்று அமுல் பேபி போல் இருந்த ஒருவர் திடீரென என்ட்ரி கொடுத்து, “ப்ரீத்தியை நான்தான் திருமணம் செய்து கொள்வேன்!” என்று ப்ரீத்தியின் தந்தையிடம் கூற அனைவரும் அதிர்ச்சியில் நிற்கின்றனர். அப்போது ப்ரீத்தியின் தந்தை கவுதமோ, “தம்பி நீ மண்டபம் மாறி வந்து கல்யாணத்தை நிறுத்துற!” என்று கேட்க, இன்னொருபுறம் மாப்பிள்ளை யுவாவின் தந்தையாக நடிக்கும் பிரபல நடிகர் லிவிங்ஸ்டன், “உனக்கு நிறுத்துவதற்கு வேற கல்யாணமே கிடைக்கலையா?” என்று அந்தக் கோபத்திலும் சரமாரியாக கேள்வி கேட்டார்.
அப்போது மண மேடையில் இருந்து எழுந்து வந்த ப்ரீத்தீ, தன் அப்பா கவுதமிடம் “அப்பா.. அவர் சொல்வது உண்மைதான் .. நான்தான் அவரை வரச் சொன்னேன்.. நான் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன்!” என்று அந்த புதிதாக வந்த ‘அமுல் பேபி’யை கைகாட்ட கவுதம் அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில் மாப்பிள்ளை யுவா, கவுதமின் முதல் தாரத்து மகளான மீராவுக்கு யுவாவை திருமணம் செய்து வைக்கலாம் என்று வாசுகி ஆலோசனை கூற, கவுதம் பிடிவாதமாக மறுத்ததுடன் ப்ரீத்தியிடம், யுவாவை திருமணம் செய்துகொள்ள எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் ப்ரீத்தி கேட்கவில்லை. கடைசியில் ‘இந்த கல்யாணம் நின்னு போச்சு’ என புலம்ப ஆரம்பித்துவிட்டார். இதுதான் சாக்கு என்று யுவாவின் அத்தை (தன் மகளை யுவாவுக்கு திருமணம் பண்ணி கொடுக்க எவ்வளவோ போராடினார்) என் மகளை யுவாவுக்கு கொடுப்பேன் என கூற ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் மீராவின் வளர்ப்பு அம்மா, மீராவின் அம்மாவின் தங்கை , யுவாவின் அம்மா என பலரும் யுவாவுக்கு மீராவையே பரிந்துரைத்தனர். ஆனால் கவுதம் மீராவை தனக்கு பிடிக்காது என்பதால் அதற்கும் மறுக்கிறார். கவுதமுக்கு தன் முதல் தாரத்து மகளான மீராவை பிடிக்காது. அவர் எப்போது மீராவை ஏற்றுக் கொள்வார் என்பது தான் இந்த ‘கண்ணான கண்ணே’ சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.