என்னது கண்ணம்மா விலகுறாரா?.. கதறும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள்! உண்மை பின்னணி என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் முதன்மையான சீரியலாக விளங்கி வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல்.

இதில் கண்ணம்மா மற்றும் பாரதி என்கிற இளம் தம்பதியினரின் கதை சொல்லப்பட்டு வருகிறது. பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பாரதியின் சந்தேகத்தால் பிரிந்து, அவரவர்களிடம் இருக்கும் தங்களுடைய குழந்தைகளை வளர்த்து வருகின்றனர்.

இதில் பாரதியிடம் இருக்கும் குழந்தை, பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் பிறந்த குழந்தைதான் என்பது, இருவருக்குமே தெரியாமல் இருந்து வந்த நிலையில் இப்போது இந்த உண்மை கண்ணம்மாவுக்கு மட்டும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கண்ணம்மா ஹேமாவின் மீது அதிக பாசம் காட்டி வருகிறார்.

ஆனால் ஹேமாவை, தன் குழந்தை என்கிற உண்மை தனக்கு தெரியாமலே வளர்த்துவரும் பாரதி, தன் குழந்தையை தன்னிடம் விட்டுவிடும்படி கண்ணம்மாவின் வந்து கெஞ்சும் அளவுக்கு ஆகிவிட்டார். இதனிடையே கண்ணம்மாவின் இன்னொரு குழந்தை தன்னிடம் இருப்பதாக பொய் சொல்லி வெண்பா சுற்றலில் விட்டதை தற்போது கண்ணம்மா அறிந்து கொண்டதால் வெண்பாவை தினமும் போன் செய்து கலாய்த்து வருகிறார்.

இப்படி போகும் இந்த சீரியலில் ஏற்கனவே கண்ணம்மாவின் தந்தை மற்றும் பாரதியின் தம்பி அகிலன் கேரக்டர் உள்ளிட்டோர் மாற்றப்பட்டனர். முன்னதாக கண்ணம்மாவின் தந்தை கேரக்டரில் நடித்து வந்த வெங்கட் மரணமடைந்தது காரணமாக அவருடைய கதாபாத்திரம் மாற்றப்பட்டது.

இதேபோல் முக்கியமான வில்லியாக நடித்துவரும் வெண்பாவின் கேரக்டர் மாற்றப்படுவதாகவும் அல்லது அந்த கேரக்டர் முடித்து வைக்கப்படுவதாகவும் கூட சில வதந்திகள் பரவி வந்தன. காரணம், அந்த கேரக்டரில் நடிக்கும் ஃபரீனா தற்போது கர்ப்பிணியாக இருப்பதால் அவரால் இந்த கேரக்டரில் தொடர்ந்து நடிப்பது கேள்விக்குறியாகிவிட்டது என்பன போல பல பேச்சுகள் நீடித்தன.

ஆனால் அதற்கு பதிலடி கொடுத்த வெண்பா, இவற்றை மறுத்ததுடன், தான் தான் வெண்பா கேரக்டரில் நடிக்கப் போவதாகவும், தனக்கும் சரி, அந்த கேரக்டருக்கும் சரி முடிவு கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் நடிக்கும் சில காட்சிகளில் கர்ப்பிணியாக தான் இருப்பது ஆங்காங்கே தெரிய வந்தும் கூட ரசிகர்கள் அதை ஏற்று வரவேற்பு கொடுப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாரதி கண்ணம்மாவில், கண்ணம்மா கேரக்டரில், அதாவது ஹீரோயின் கேரக்டரில் நடித்து வரும் ரோஷினி ஹரிபிரியன், இந்த சீரியலை விட்டு விலக உள்ளதாகவும், அதற்கு காரணம் அவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வருவது தான் என்றும் கூறப்பட்டு வருகிறது.

எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தியோ, தகவலோ ரோஷினி ஹரிபிரியன் தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Kannamma roshini quits Bharathi Kannamma Serial deets

People looking for online information on Bharathi Kannamma, Bharathi kannamma promo, Bharathi kannamma today episode, Bharathi kannamma today promo, Roshini Haripriyan, Vijay Television, Vijaytv will find this news story useful.