விஷம் குடித்தபடி செல்ஃபி வீடியோ எடுத்த சின்னத்திரை நடிகை! தற்கொலைக்கு முன் காதலன் மீது..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பெங்களூருவிலுள்ள சுத்தகுண்டே பாளயா என்ற பகுதியில் வசித்து வந்தவர் கன்னட சின்னத் திரை நடிகை சந்தனா (29). சீரியல்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வந்த சந்தனா, தினேஷ் என்பவரை காதலித்து வந்தார்.

Advertising
Advertising

ஐந்து வருடமாக காதலித்து வந்த இந்த ஜோடி, விரைவில் திருமணம் செய்யவிருந்தனர். இந்நிலையில் இருவருக்கும் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சமீபத்தில் சந்தனாவை திருமணம் செய்ய முடியாது என்று தினேஷ் கூறியுள்ளார். இதனால் மனம் உடைந்த சந்தனா செய்வதறியாது திகைத்துள்ளார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை சந்தனா கேட்டும் தினேஷ் அவரை ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழித்துள்ளார். சந்தனாவின் பெற்றோர் தினேஷ் குடும்பத்தை அணுகியபோது, சந்தனாவை பற்றித் தரக்குறைவாக பேசியதுடன் திருமணத்துக்கு மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனம் மிகவும் பாதிக்கப்பட்ட சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். சீரியல்களில் வருவது போலவே தன் வாழ்க்கையையும் விபரீதமாக்கிவிட்டார் சந்தனா. விஷ பாட்டிலை கையில் வைத்தபடி தினேஷ் பற்றிய உண்மைகளை கூறி ஒரு செஃல்பி வீடியோவை இறக்கும் முன் பதிவு செய்தார். ஆபத்தான நிலையில் சந்தனாவை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர் குடும்பத்தினர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து சுத்தகுண்டே பாளையா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சந்தனாவின் வாக்குமூலத்தை பதிவு செய்த அவர்கள் செல்ஃபோனையும் கைப்பற்றி உள்ளனர். தற்போது தலைமறைவாகியுள்ள தினேஷை தேடி வருகின்றனர்.

சந்தனாவின் மறைவு அவரது ரசிகர்களுக்கு மனவருத்தத்தை அளித்துள்ளது. தங்களின் இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Kannada tv serial actress chandana commits suicide

People looking for online information on Chandana, Kannada actress, Suicide will find this news story useful.