CAPTAIN MILLER: தனுஷூடன் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர்! போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் இணைந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "புரட்சிகரமான பிறந்தநாள் வாழ்த்துகள்".. இயக்குனர் பா. ரஞ்சித்தை வாழ்த்திய தெருக்குரல் அறிவு!

நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம்  ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது. ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்க உள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும்  பீரியட் படமாக உருவாகவுள்ளது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

கேப்டன் மில்லர்  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜான் கொக்கன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டர் நாகூரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, த.ராமலிங்கம் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார். பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றனர். மாஸ்டர் திலீப் சுப்பராயன், சண்டை காட்சி இயக்கத்தை கவனிக்க உள்ளார், இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் தனுஷ், ஜான் கொக்கன் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் ஏற்கனவே தமிழில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஜிகர்தண்டா - 2 படத்தில் இணையும் பிரபல முன்னணி மலையாள நடிகை? செம்ம COMBO!

தொடர்புடைய இணைப்புகள்

Kannada Super Star Shiva Rajkumar on board for Captain Miller

People looking for online information on Captain Miller, Dhanush, Kannada Super Star Shiva Rajkumar, Shiva Rajkumar will find this news story useful.