BREAKING : அப்படி போடு..!! அந்த சூப்பர் ஹிட் லவ் படம் தமிழில் ரீமேக் ஆகிறது.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னடத்தில் சூப்பர் அடித்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் தற்போது தமிழில் ரிமேக் ஆகவுள்ளதாம். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கன்னடத்தில் வெளியான திரைப்படம் தியா. காதலை மையப்படுத்தி உருவான இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக OTT தளத்தில் வெளியான இத்திரைப்படத்தை, தமிழ் சினிமா ரசிகர்களும் வெகுவாக பாராட்டினார்கள். இத்திரைப்படத்தில் தியா கதாபாத்திரத்தில் நடித்திருந்த குஷி ரவி என்பவரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். 

இந்நிலையில் தற்போது தியா திரைப்படம் தமிழில் ரிமேக் ஆவது குறித்த பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தை மனோஜ் லியோனல் ஜேசன் என்பவர் இயக்குவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பா.இரஞ்சித் தயாரிக்கும் குதிரை வால் என்கிற படத்தை தற்போது இயக்கியுள்ளார். இதில் கலையரசன், அஞ்சலி பாட்டில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான குதிரைவால் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வைரல் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து தியா படத்தின் ரிமேக்கில் நடிக்கும் நடிகர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

தமிழில் ரிமேக் ஆகும் கன்னட படம் | Kannada super hit movie dia to be remake in tamil

People looking for online information on Dia, Dia Remake, Kalaiyarasan, Kuthiraival, Pa Ranjith will find this news story useful.