LATEST: காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவின் FIRST LOOK போஸ்டர்! செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

Kanmani Star Nayanthara from Kaathu Vaakula Rendu Kaadhal
Advertising
>
Advertising

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார்.  விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Kanmani Star Nayanthara from Kaathu Vaakula Rendu Kaadhal

இந்த படத்தின் விஜய் சேதுபதி தோற்றத்தில் முதல் லுக் போஸ்டர் இன்று (15.11.2021) காலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ. இதனைத்தொடர்ந்து மதியம் நடிகை சமந்தாவின் தோற்றத்தில் முதல் லுக் போஸ்டர் வெளியாகியது. இந்த போஸ்டரில் காதீஜா எனும் பெயரில் சமந்தா நடிக்கிறார் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடிகை நயன்தாராவின் தோற்றத்தில் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார் இந்த படம் வருகிற டிசம்பரில் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீசாக உள்ளது என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Samantha

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kanmani Star Nayanthara from Kaathu Vaakula Rendu Kaadhal

People looking for online information on Samantha will find this news story useful.