"தன் பட போஸ்டரை ஒட்டிய ஹீரோயின்.. கேமரா மேனோட எப்படி லவ்னு தெரில".. வாழ்த்திய கஞ்சா கருப்பு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மஞ்சக்குருவி. 

Advertising
>
Advertising

Also Read | Bharathi Kannamma : "ஒரு DNA டெஸ்ட் எடுக்க 10 வருஷமா?".. RESULT -க்கு முன் பாரதியை கழுவி ஊற்றிய டாக்டர்.!

ஆடுகளம், வடசென்னை, காந்தாரா உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்தி நடிகர் கிஷோர் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக பிரபல குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் நடிக்கிறார்.  இவர்களுடன் இந்த படத்தில் விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா என பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி அரங்கன் சின்னத்தம்பி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு சௌந்தர்யன் இசை அமைத்திருக்கிறார். ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில் கிஷோரின் தங்கையாகவும், படத்தின் நாயகியாகவும் நடிகை நீரஜா என்பவர் நடித்திருக்கிறார். இவர்தான் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் பட குழு மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது, படத்தின் கதாநாயகி போஸ்டர் ஒட்டும் ஃபோட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

முன்னதாக இப்படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய நகைச்சுவை நடிகரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான நடிகர் கஞ்சா கருப்பு, “இந்த படத்தில் நான் சில காட்சிகளை நடித்துள்ளேன், ஹீரோயினும் நான் நடித்த சில காட்சிகளில் இடம்பெற்றார். ஆனால் அவருக்கும் கேமரா மேனுக்கும் எப்படி லவ் வந்தது என தெரியவில்லை. ஆனாலும் லவ் பண்ணுங்க. கல்யாணம் பண்ணுங்க.. நடிப்பை விட்டுவிடாதீர்கள். நிறைய நடித்து கல்லாவை நிரப்புங்கள். இந்த பெண்ணுக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். ஏனென்றால் தன் படத்துக்காக போஸ்டர் எல்லாம் ஒட்டியிருக்கிறார். நான் படம் பண்ணினேன்., என் பட ஹீரோயின் எல்லாம் ஆப்பிள் ஜூஸ் தான் கேட்டார்” என கலகலப்பாக பேசினார்.

பின்னர் இதுகுறித்து பேசிய இப்பட நடிகை நீரஜா, “எல்லா வேலையும் கஷ்டம்தான்.. போஸ்டர் ஒட்டுவது ஒன்றும் ஈஸி அல்ல. நிறைய படங்களின் பின்னணியில் போஸ்டர் ஒட்டும் பணி நடக்கிறது. அதை நாம் பெரிதாக பார்த்ததில்லை. நான் ஒன்றும் செய்துவிடவில்லை. நம் படத்துக்கு நாம் புரொமோஷன் பண்ணியிருக்கிறோம். கௌரவம் பார்த்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது.

ஏதோ என்னால் முடிந்த ஒரு சிறிய முயற்சியாகவே இதை செய்தேன்! என்னை பொறுத்தவரை ஒரு படம் முடிந்தவுடன் நம் வேலையை பார்த்து போக முடியாது. அது என் கேரக்டர் இல்லை. அந்த படக்குழுவினருடன் பயணித்து அவர்களின் வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ள விரும்பினேன். பொண்ணுங்க ஃப்ளைட்டே ஓட்டுறாங்க.. நான் போஸ்டர் ஒட்டியது பெரிய விசயம் எல்லாம் இல்லை” என குறிப்பிட்டார்.

Also Read | ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார் 2’.. South -ல படத்தை ரிலீஸ் பண்ண ஆர்வம் காட்டும் விநியோகஸ்தர்கள்.!

Kanja Karuppu praises heroine sticks poster for her movie

People looking for online information on Kanja Karuppu, Kishore will find this news story useful.