"எனக்கு பேவரைட் கோமாளி இவங்கதான் காரணம்".... போட்டு உடைத்த கனி... யாருனு பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடன் போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.

இந்நிலையில் ஆரம்பம் முதலே தனது சிறப்பான பங்களிப்பு மூலம் கவனம் பெற்று இருப்பவர் கனி. இவர் யார் என்பது பலரும் தெரியாத விஷயமாக இருக்கலாம். இவர் மக்கள் டிவியில் ஒளிபரப்பான 'சொல் விளையாட்டு' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவர், பிக்பாஸ் சீசன் 2வில்  பங்கேற்ற நடிகை விஜய லட்சுமியின் சகோதரி மற்றும் இயக்குனர் திருவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய தினம் குக் வித் கோமாளி  சீசன்2 முடிந்துள்ள நிலையில் கனி முதலிடத்தை தட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்களுடன் லைவ்வில் பேசிய அவர் நமக்கு தெரியாத பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்படி கூறும் பொழுது உங்களுக்கு பேவரைட்டான கோமாளி யார் என்று ரசிகர் ஒருவர் கேட்க, நிச்சயமாக சுனிதா தான். ஆரம்பத்திலே அவர்தான் எனக்கு கோமாளியாக வந்தார். பின்பு எப்படி எங்களுக்குள் நட்பு மலர்ந்தது என்று தெரியவில்லை. போகப் போக நாங்கள் மிகவும் நெருக்கமாகி விட்டோம். எனக்கு அவர் பைனல்ஸில் கோமாளியாக வந்தது மிகவும் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.

"எனக்கு பேவரைட் கோமாளி இவங்கதான் காரணம்".... போட்டு உடைத்த கனி... யாருனு பாருங்க..! வீடியோ

Tags : Kani

தொடர்புடைய இணைப்புகள்

Kanis favourite comali is this person பேவரைட் கோமாளி போட்டு உடைத்த கனி

People looking for online information on Kani will find this news story useful.