நடிகை கனிகா புகழ் பெற்ற ஹாலோவீன் நாளை முன்னிட்டு ஹாலோவீன் மேக்கப் போட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Also Read | மெக்காவுக்கு புனித பயணம் செய்த யுவன் ஷங்கர் ராஜா.. இஹ்ராம் அணிந்து பிரார்த்தனை! வைரல்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா.
மதுரையை சார்ந்த இவர் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார்.
பின் நடிகர் அஜித்துடன் வரலாறு (2006) படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார். ஆட்டோ கிராப், எதிரி படங்களிலும் நடித்துள்ளார்.
ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியதும் கனிகா தான். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. நடிகை கனிகா தற்போது சன் டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கனிகாவும் ஒருவர். நடிகை கனிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டவர்.
இந்நிலையில் நடிகை கனிகா, தனது மகனுடன் இணைந்து ஹாலோவீன் நாளை முன்னிட்டு ஹாலோவீன் மேக்கப் போட்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தொப்பி அணிந்து Blonde தலைமுடியுடன் கருப்பு நிற டி சர்ட் அணிந்து கனிகா காணப்படுகிறார்.
Also Read | அஜித் நடிக்கும் 'துணிவு'.. படத்திலிருந்து BIGGBOSS அமீர் வெளியிட்ட வைரல் SCREEN SHOT!