‘வாழ்க்க ஒரு வட்டம்’.. 19 வருசத்துக்கு அப்றம் முதல் பட நடிகருடன் நடிக்கும் அஜித் பட நாயகி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 18 பிப்ரவரி 2022: கடந்த 2002-ல் உருவாகி வெளியான பிரபல திரைப்படம் ஃபைவ் ஸ்டார் (FIVE STAR).

Kaniha and Prasanna join hands for a series after 19 years
Advertising
>
Advertising

ஃபைவ் ஸ்டார்

இயக்குநர் சுசி கணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிகர் பிரசன்னா மற்றும் கனிகா இருவரும் நடித்ததுடன், இவர்களின் திரைப்பயணமும் கோலிவுட்டில் இந்த படம் மூலம் துளிர்விடத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Kaniha and Prasanna join hands for movie after 19 years

Also Read: அரபிக் குத்து பாட்டுக்கு பீஸ்ட் மோடுல ஆடிய இயக்குநர் நெல்சனின் மகன்.. பாராட்டி பகிர்ந்த இளம் ஹீரோ.. வீடியோ

இயக்குநர் மணிரத்னம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில், தோன்றிய நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை கனிகா இருவரும் திரையில் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும்படியான பசுமையான ஜோடிகளாக கருதப்படும் அளவுக்கு இந்த திரைப்படத்தில் அவர்களின் கதாபாத்திரங்கள் அமைந்தன.

பிரசன்னா, கனிகா

இதனிடையே நடிகர் பிரசன்னா முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அண்மையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான மாஃபியா மற்றும் புரோஜக்ட் அக்னி ஆகிய திரைப்படங்களில் பிரசன்னா நடித்திருந்தார்.

இதேபோல் வரலாறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை கனிகா, மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்ததுடன் தற்போது சன் டி.வியின் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.

19 ஆண்டுகளுக்குப் பிறகு,

இந்நிலையில் தான் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரசன்னா மற்றும் கனிகா இருவரும் ஒரு சுவாரஸ்யமான சீரிஸ்க்காக மீண்டும் இணைகிறார்கள். இது தொடர்பாக தமது சமூக வலைதளத்தில் அறிவித்த நடிகை கனிகா, “2002-ல் madras talkies தயாரிப்பில், சுசிகணேசன் சார் இயக்கிய ஃபைவ் ஸ்டார் படம் மூலம் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன்.

வாழ்க்கை ஒரு முழு வட்டமாக..

பின்னர் இப்போது.. 19 ஆண்டுகளுக்குப் பிறகு எனது முதல் சக நடிகரான பிரசன்னாவுடன் மீண்டும் திரையில் இணைகிறேன், வாழ்க்கை ஒரு முழு வட்டமாக வந்தது போல் உணர்கிறேன். உங்களுடன் பணிபுரிவதில் மிகவும் மகிழ்ச்சி ப்ராஸ் (பிரசன்னா).. நாம் ஸ்மார்ட்.. வளர்ந்து வரும் ஆண்டுகளில் நிச்சயமாக சிறப்பாக இருக்கிறோம். நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், இந்த அற்புதமான அனுபவத்திற்கு இயக்குநர் எம்.பாலாஜிக்கு நன்றி. ஒரு சிறந்த கலைஞர்களுடன் இந்த சூப்பர் மற்றும் அசத்தல் தொடரில் பணிபுரிவதில் மகிழ்ச்சி!” என நடிகை கனிகா குறிப்பிட்டுள்ளார்.

Also Read: அதிர்ச்சி! ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் குடும்பத்தில் அடுத்தடுத்து சோகம்!.. ரசிகர்கள் ஆறுதல்!

மற்ற செய்திகள்

Kaniha and Prasanna join hands for a series after 19 years

People looking for online information on Five star movie, Five star movie prasanna kaniha, Five star movie prasanna kanikha will find this news story useful.