'டைட்டில் வின்னர்' இவர் தான்! சிம்பு பங்குபெற்ற குக் வித் கோமாளி சீசன் 2!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சி பலருடைய பெரும் வரவேற்ப்பை பெற்றது.

kani won Cook With comali Season2 Grand Finale title கனி

இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் களை கட்டியது. இந்த சீசனில் பலரும் பங்கேற்றனர். குறிப்பாக புகழ், சிவாங்கி, அஷ்வின்,  பாலா, சரத், ஷகிலா, ரித்திகா என பலரும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பைனலுக்கு 5 குக்குகள் வந்தனர். 

kani won Cook With comali Season2 Grand Finale title கனி

தமிழ் புத்தாண்டையொட்டி இன்று ஒளிபரப்பான கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் அஷ்வின், ஷகிலா, கனி, பாபா பாஸ்கர், பவித்ரா ஆகியோர் குக்குகளாக பங்கேற்றனர். கோமாளிகளாக சிவாங்கி. பாலா. புகழ் .மணிமேகலை .சரத் ஆகியோர் பங்கேற்றனர்.

kani won Cook With comali Season2 Grand Finale title கனி

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர்.ரஹ்மான் (இணையவழி) உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக வந்து சென்றனர். வெங்கடேஷ் பாத் மற்றும் தாமு மாஸ்டர் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றிருந்தனர். ரக்‌ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதில் குக் வித் கோமாளி சீசன் 2வதாக ரன்னர் அப்பாக அஷ்வினும் இரண்டாவது ரன்னர் அப்பாக ஷகிலாவும், வின்னராக 'காரக்குழம்பு' கனியும் அறிவிக்கப்பட்டு விருதுகளும் கேஷ் பரிசுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருகை தந்த நடிகர் சிம்பு இந்த விருதுகளை அவர்களுக்கு வழங்கினார். 

ALSO READ: குக் வித் கோமாளி.. சீசன் 1-ல் வின்னருடன் இருந்த கோமாளி யாரு தெரியுமா? - பவித்ரா சொன்ன ரகசியம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kani won Cook With comali Season2 Grand Finale title கனி

People looking for online information on CookWithComali, CookWithComali2, CWC, Silambarasan TR, Simbu, Trending, VijayTelevision, Vijaytv will find this news story useful.